TVK Vijay தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன தெரியுமா? த.வெ.க தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன தெரியுமா?

 

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் த.வெ.க ஆட்சி அமைக்க உள்ள நிலையில், த.வெ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கை, பேசுபொருளாக வலம்வர தொடங்கியுள்ளது.

1.மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாயும், அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்களும் வழங்கப்படும்.

2.அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும் சீதனமாக வழங்கப்படும் என த.வெ.க கூறியுள்ளது.

3.வெற்றி பயணம் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் இயங்கும் அரசுப் பேருந்துகளில், கட்டணமில்லா இலவச பயண சேவை மகளிர்களுக்கு வழங்கப்படும்.

4.கல்வி மேற்படிப்பை தொடரும் மாணவர்களுக்கு, எந்தவொரு பிணையமும் இல்லாமல் ரூபாய் 20 லட்சம் கடன் தொகை வழங்கப்படும் மேலும் புதியதாக 50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

5.வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 4000 ரூபாயும், டிப்ளமோ முடித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 2500 ரூபாயும் வழங்கப்படும்.

5.ஏக்கருக்கும் குறைவாக வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர் கடன் முழுவதுமாக ரத்து!

6.ஒரு டன் கரும்பின் அடிப்படை விலை 4500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படும் என்றும் த.வெ.க தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *